விடுகதை கேட்கும் மான்

ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டில் ஒரு மான் இருந்தது. அந்த மானை, ‘விடுகதை மான்’ என்று காட்டில் இருக்கும் விலங்குகள் அழைத்தன.
ஒரு நாள், மான் குரங்கிடம் சென்று, “குரங்கு நண்பா! நான் ஒரு விடுகதை
கேட்கிறேன். அதற்கு நீ பதில் சொல்.” என்றது.
குரங்கு, “என்ன விடுகதை? சொல்.” என்றது.
மான் விடுகதையைக் கூறியது. “உருளும் வீட்டை சுற்றி கருப்பு வேலி. அது என்ன?”என்று கேட்டது மான்.
குரங்கு நீண்ட நேரம் யோசித்தது. குரங்கு விடையைக் கண்டுபிடித்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் ‘கண் இமை’ என்று விடை கூறியது. பிறகு, “விடை சரியா?” என்றது.
மான், “விடை சரி” என்றது.
அடுத்தது நீர்யானையிடம் சென்றது. “நீர்யானை நண்பா! நான் ஒரு விடுகதை
கேட்கிறேன். அதற்கு நீ பதில் சொல்.” என்றது மான்.
நீர்யானை, “விடுகதை சொல்.” என்றது.
மான் விடுகதையைக் கூறியது. “தரையிலேயே கிடைத்தாலும் அழுக்காக மாட்டேன்.
நான் யார்?” என்றது மான்.
நீர்யானை கண்ணிமைக்கும் நேரத்தில் ‘நிழல்’ என்றது.
மான், “சரியான விடை” என்றது.
அதற்கடுத்து முயலிடம் சென்று, “முயல் நண்பா! நான் ஒரு விடுகதை கேட்கிறேன்,
அதற்கு நீ பதில் சொல்.” என்றது மான்.
முயல், “என்ன விடுகதை? சொல்.” என்றது.
மான் விடுகதையைக் கூறியது. “ஒல்லியான மனிதனுக்கு ஒரே ஒரு காது” என்றது மான்.
முயல் சிறிது நேரத்தில் விடையைக் கண்டுபிடித்தது. முயல், “விடை ஊசி” என்றது.
மான், “சரியான விடை” என்றது.
அடுத்ததாக சிறுத்தையிடம் சென்று, “சிறுத்தை நண்பா! நான் ஒரு விடுகதை
கேட்கிறேன் அதற்கு பதில் சொல்.” என்றது மான். சிறுத்தை, “என்ன விடுகதை சொல்” என்றது. மான், “வாய் இல்லாமல் சத்தம் போடும் அது என்ன?” என்று கேட்டது.
சிறுத்தை சிறிது நேரத்தில் விடையைக் கண்டுபிடித்தது. சிறுத்தை கேட்டது, “மணி!
சரியான விடையா?” என்றது.
மான், “சரியான விடை” என்றது.
விடுகதைக்கு விடை கூறிய விலங்குகள் அனைத்திற்கும் பரிசுப் பொருட்கள்
வழங்கிவிட்டு, மான் தன் வீட்டிற்கு சென்றது. மற்ற விலங்குகள் அனைத்தும் தங்கள் வீட்டிற்கு மிகவும் மகிழ்ச்சியாகச் சென்றன.





Comments