top of page

பொட்டல் காட்டில் மர்மம்

இனியன், ஏழாம் வகுப்பு
இனியன், ஏழாம் வகுப்பு

ஒரு நாள் கார்த்திக் தனது நண்பர்களுடன் பொட்டல் காட்டிற்கு போனான். அங்கு எல்லோரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாட தங்களை தயார் படுத்தி கொண்டிருந்தனர். எப்பவும் போல் கார்த்திக் கேப்டனாக இருந்தான். 


மேட்ச் தொடங்கியது. எதிர் அணியை விட கார்த்திக் அணி 40 ரன்கள் வித்தியாசம் இருந்தது. 20 பந்துகளில் 40 ரன்கள் அடிக்க வேண்டும். எதிர் அணியில் ஒருவன் திடீரென்று 6 ரன்களை ஒரே அடியில் அடித்தான். அதை தொடர்ந்து நான்குக்கள், ஆறுகள் என்று அடித்து கொண்டே இருந்தான். கடைசி பந்து நான்கு ரன்கள் எடுக்க வேண்டும். அப்போது அவன் அந்த பந்தை தூக்கி அடித்தான். பந்து பறந்து போய் விழுந்த இட த்தைப் பார்த்து முத்து ஓடி போய் பந்தை பிடித்து விட்டான். 


கார்த்திக் அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்து விட்டது. ஆனால் முத்துவின் கையில் பந்துடன் வரும்போது அவன் கையிலிருந்து ரத்தம் சொட்டியதைக் கார்த்திக் பார்த்தான். 

“ டேய் முத்து என்னடா ஆச்சு? “

என்று கேட்டான் கார்த்திக். முத்துவே அப்போது தான் கவனித்தான். ஏதோ நரம்பு அறுத்து விட்டது போல ரத்தம் கொட்டியது. என்ன அது என்று யாருக்கும் தெரியவில்லை. அவனுடைய கையை இறுக்கிப் பிடித்தான் சுரேஷ். 


சில நொடிகளில் ரத்தம் வருவது நின்றுவிட்ட து. 


முத்துவின் கையில் இருந்து பந்தை வாங்கிய கார்த்திக்கின் விரல்களில் வித்தியாசமாக ஏதோ பட்டது. தடவிப்பார்த்தான். நீளமான இரும்புக்கம்பி மாதிரி இருந்த து. பந்தில் ஒட்டிக் கொண்டிருந்த அந்தக் கம்பியை எடுத்தான். 


அது என்னவென்று பார்த்தால் மங்கிய நிறத்தில் தங்கச்சங்கிலி மாதிரி இருந்தது. .

” டேய்!... தங்க செயின்டா ” என்று சுரேஷ் கத்தினான்.


“ இன்னிக்கி விலைக்கி செம காசுடா.. நீ வித்தால் ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வாங்கலாம்..” என்றான் முத்து.


ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வாங்க வேண்டும் என்பது கார்த்திக்கின் கனவு. கார்த்திக்கின் கண்களில் புத்தம் புதிய ஸ்போர்ட்ஸ் சைக்கிள் தெரிந்தது.


கார்த்திக் என்ன சொல்லப்போகிறான் என்று எல்லோரும் அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் கார்த்திக் வாயைத் திறந்தான்.


” டேய் போய் போலீஸ் கிட்ட கொடுத்திடலாம்டா ” என்றான் கார்த்திக்.


எல்லோரும் சென்று காவலர் அதிகாரியிடம் கொடுத்தனர். அவர்கள் அதை பார்த்து பழசாக இருக்கிறதே என்று ஆராய்ச்சி அலுவலர்களிடம் கொடுத்தனர். அவர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்தபோது அது 2000 வருடத்திற்கு முன்பு செய்யப்பட்டது என்று கூறினர். 


அந்த பொட்டல் காட்டை ஆய்வு செய்து நிறைய நாணயங்கள், வளையல்கள், மண்பாண்டங்கள் கண்டறிந்தனர். அப்புறம் கார்த்திக் மற்றும் அவர்களது நண்பர்களின் பெயர்கள் செய்தித்தாள்களில் வந்தது.


2 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
2 days ago
Rated 5 out of 5 stars.

Very Interesting... I like very much for the kids honesty 😊

Like

Guest
3 days ago
Rated 5 out of 5 stars.

Super little champ

Like
bottom of page