நீல நண்டு

வணக்கம் குழந்தைகளே!
என் பெயர் நீல நண்டு. ஆங்கிலத்தில் என்னை Blue Swimmer crab என்று அழைப்பார்கள். Swimmer என்றால் நீச்சலடிப்பவர் என்று பொருள்.
இதோ என் உடலுக்குக் கீழே உள்ள கால் பகுதியைப் பாருங்களேன்.
கொடுக்குகள் இல்லாமல் நீந்துவதற்கு உதவக்கூடிய துடுப்புகள் போலவே
இருக்கின்றனவா?
நான் கடலில் நீந்தக்கூடிய நண்டு இனம், அதற்கு ஏற்றபடி என் கால்களின் இறுதிப்பகுதியில் துடுப்புகள்
அமைக்கப்பட்டிருக்கின்றன.
நான் பெரும்பாலான நேரம் மண்ணுக்குள் புதைந்து இருப்பேன். சிப்பிகள், கிளிஞ்சல்கள், குட்டி மீன்கள் போன்றவற்றை சாப்பிடுவேன்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கடற்பகுதிகளில் என்னை நீங்கள் பார்க்கலாம்.
மீன் சந்தைகளில்கூட என்னை நீங்கள் பார்க்கலாம்.
என் இனத்தைப் பொறுத்தவரை ஆண் நண்டுகளை விட பெண் நண்டுகளி நிறம் சற்றே குறைவானதாக இருக்கும்.
ஆண் நண்டுகளின் உடல் நீல நிறத்தில் வெள்ளைப் புள்ளிகள் கொண்டதாக
இருக்கும்.
நான் எப்படி நீந்துவேன் என்று யூட்யூப் வீடியோவிலும் பார்க்க முடியும். தேடிப் பாருங்களேன். என் நீச்சல் பாணி அசத்தலாக இருக்கிறது, இல்லையா?

உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர்
பட்டமும் பெற்றவர்.
இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது,பாவை விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். கடலும் மனிதரும், விலங்குகளும் பாலினமும், ஆழ்கடல், சூழலும் பெண்களும், நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து நூல்களை எழுதியுள்ளார்.






Comments