கண்ணுக்குட்டி
- கமலா முரளி

- 19 hours ago
- 1 min read

அழகு அழகு கண்ணுக்குட்டி !
ஆடிவரும் கண்ணுக்குட்டி!
அம்மா காலை உரசியே
அசைந்து வரும் கண்ணுக் குட்டி !
சின்ன சின்ன கண்ணுக் குட்டி!
நின்னு பார்க்கும் கண்ணுக்குட்டி!
தின்ன வாழைப் பழம் தந்தால்
துள்ளி வரும் கண்ணுக்குட்டி!
புல்வெளி தேடும் கண்ணுக்குட்டி!
பூப்போல மின்னும் கண்ணுக்குட்டி!
மேய்ச்சல் நிலத்தைக் கண்டு விட்டால்
மகிழ்வாய் துள்ளும் கண்ணுக்குட்டி!

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப்
படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.
கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட்
காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை,
மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர்,
கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற
இதழ்களில் வெளிவந்துள்ளன.





Comments