மோரு மோரு மோரு
- கமலா முரளி

- Jun 15
- 1 min read

மோரு மோரு மோரு
தாகம் தீர்க்கும் மோரு
மத்தினாலே தயிரைக் கடைந்து
பாட்டி தரும் மோரு
நீர் நிறையச் சேர்த்தாலும்
வெண்ணை மணக்கும் மோரு
கல் உப்பும் பெருங்காயமும்
கரைத்து விட்ட மோரு
கடுகுடனே பச்சை மிளகாயும்
தாளித்துப் போட்ட மோரு
பானையில் இருக்கும் மோரு
மண் மணக்கும் மோரு
மோரு மோரு மோரு
தாகம் தீர்க்கும் மோரு!

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப்
படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.
கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட்
காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை,
மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர்,
கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற
இதழ்களில் வெளிவந்துள்ளன.





Comments