கொழுக்கு மொழுக்கு கத்தரிக்காய்
- சரிதா ஜோ

- Sep 15
- 1 min read

கொழுக்கு மொழுக்கு கத்தரிக்கா!
குண்டு குண்டு கத்தரிக்கா!
கொத்துக் கொத்தாக் காச்சிருக்கு
கொண்டையாட்டும் கத்தரிக்கா!
ஊதா நிறக் கத்தரிக்கா!
உன் போல் இங்கே யார் இருக்கா!
குழம்பு சாம்பார் எல்லாத்திலும்
நீ இல்லைன்னா சுவை இருக்கா!
கொழுக்கு மொழுக்கு கத்திரிக்கா!
குண்டு குண்டு கத்தரிக்கா!

சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.
1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும்,
100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.
த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.




Comments