கலங்காதே கண்ணம்மா
- ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்

- Nov 15
- 1 min read

துள்ளி ஓடும் கண்ணம்மா
உன் கண்ணில் கண்ணீர்
ஏனம்மா?
குறைகளை கண்டு கலங்காதே
குறையும் நிறைதான்
வருந்தாதே!
வெண்ணிற மேகம் கருத்தது
வான் மழை எங்கும் கொட்டியது!
கூட்டுப்புழுவும் சுருங்கியது
பட்டாம் பூச்சியாய் பறந்தது!
மின்னல் மண்ணில் முட்டியது
காளான் அங்கே பிறந்தது!
ஜன்னல் கொஞ்சம் திறந்தது
அதில் பரந்த வானம் தெரிந்தது!
பசுவின் மடியோ கனத்தது
கன்றின் வயிறோ நிறைந்தது!
முட்டை உள்ளே உடைந்தது
அழகிய குஞ்சும் பிறந்தது!
விதையும் மண்ணில் புதைந்தது
மரமும் ஒன்று துளிர்த்தது!
நெல்லும் ஆலையில் வெந்தது
நாம் உண்ணும் உணவாய் வந்தது!
இடர்களை கண்டு கலங்காதே
புது விடியலும் பிறக்கும் வருந்தாதே!

சிறுகதை , கவிதை எழுதிவருகிறார். சிறார்களுக்கான நீரோடை மற்றும் கதைசொல்லப்போறோம் குழுக்களில் கதைசொல்லியாக இருக்கிறார்.
முதல் நூல் நீலனின் பொங்குமாங்கடல் சிறார்களுக்கான நாவல் வெளியாகியிருக்கிறது.




Comments