top of page

இறக்கை

Jun 15
1 min read

எனக்கு மட்டும் இறக்கை இருந்தால்

உச்சி வானில் பறப்பேன்

வெள்ளைப் பஞ்சு மூட்டை போன்ற

மேகம் நடுவில் மிதப்பேன்


ஏரி குளங்கள் ஆற்றையெல்லாம்

நொடிப்பொழுதில் கடப்பேன்

எல்லா மரங்களின் உச்சிக் கிளையிலும்

இறங்கி ஓய்வு எடுப்பேன்


ஆசை வேகம் அடங்கும் வரைக்கும்

ஆனந்தமாகத் திரிவேன்

பசிக்கும் போது தரைக்கு வந்து

அடுத்த நொடியே பறப்பேன்


பாவண்ணன்
பாவண்ணன்

இயற்பெயர் பாஸ்கரன். கர்நாடகத் தொலைதொடர்புத் துறை நிறுவனத்தில் கோட்டப்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தமிழில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, குழந்தை இலக்கியம் என எல்லா தளங்களிலும் தனித்தன்மையோடு இயங்கி வரும் முக்கியமான படைப்பாளி. 'யானை சவாரி', 'மீசைக்கார பூனை', 'எட்டு மாம்பழங்கள்' ஆகியவை இவரது குழந்தைப்பாடல் நூல்கள்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page