top of page

உன்னால் முடியும் தம்பி


இரும்பும் கூட மிதக்கும் அதில்

 கப்பல் செய்யணும்! கனத்த  

 எஃகும் கூட பறக்கும் ஏரோ

 பிளேன் செய்யணும் !

 

காற்றும் கூட பாரம் சுமக்கும்

 அழுத்தி அடைக்கணும் - கடல் 

நீரும் கூட வானில் ஏறும்

 அது மேகம் ஆகணும்!

 

மரமும் கூட உருண்டு ஓடும்

 வண்டி செய்யணும்! களி

 மண்ணும் கூட நீரை சுமக்கும்

 பானை ஆகணும்!

 

 ஏழைக்கும் வாழ்வு வரும்

 காலம் மாறனும்! 

எதுவும் உன்னால் முடியும் தம்பி

 முயற்சி செய்யணும்!


குருங்குளம் முத்துராஜா
குருங்குளம் முத்துராஜா

சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள குருங்குளம்

 பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர்.

 இவரது முதல் நூல் 'பாட்டும் பாடமும்' தொடந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் " (எதிர் வெளியீடு) 2024

கொ மா கோதண்டம் நினைவு த மு எ க ச வின் சிறார் இலக்கிய விருது பெற்றுள்ளது

தனது சில பாடல்களை youtube : Muthu Raja Teacher இல் இசையுடன் காணொளியாக வெளியிட்டுள்ளார்.


1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Trichy Suber
Jun 29
Rated 5 out of 5 stars.

வாழ்வில் வலிமை சேர்க்கும் வரிகள்....

Like
bottom of page