மணல் வீடு
- பூவண்ணன்

- 3 days ago
- 1 min read

கோடி கோடி பணத்தினால்
மாடி வீடு கட்டுவர் ;
கோடி கோடி மணலினால்
வீடு நாங்கள் கட்டினோம்.
செங்கல் தேவை யில்லையே !
சிமிண்டும் தேவை யில்லையே
எங்கள் வீட்டைக் கட்டிட
இரும்பும் தேவை யில்லையே !
ஐந்து நிமிட நேரத்தில்
அழகு மிக்க வீட்டினைச்
சந்து பொந்து இன்றியே
குந்தி நாங்கள் கட்டினோம்.
கடலின் அலைகள் வீட்டினைக்
கரைத்திட் டாலும் பயமிலை.
உடனே புதிய வீட்டினை
உவகை யோடு கட்டுவோம்.
ஏடு படிக்கும் யாவரும்
கூடி வீடு கட்டினோம்)
வீடு உடைந்து போகுமுன்
ஒடி வந்து பாருங்கள்




Comments