top of page

100 கதைகள் 100 குழந்தைகள் உலக சாதனை


உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மதுரை மாநகர் மற்றும் கின்னஸ் உலக சாதனை புத்தகம் இணைந்து நடத்திய கதை மாரத்தான் "100 குழந்தைகள் 100 கதைகள் " என்ற நிகழ்வு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பல்வகை பயன்பாட்டு அரங்கில் 21. 2. 2026 அன்று காலை 9 மணிக்குத் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின்  மதுரைக்கிளையின் தலைவர் நஜுமுதீன் தலைமையேற்றார்.  


தசிஎகச வின் மாநிலத்தலைவர் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின்  துவக்கவுரையுடன் துவங்கியது. மதுரை மாநகர் செயலாளர் மு.சுலைகா பானு நிகழ்வினைப் பற்றிய நோக்க உரையாற்றினார்கள்.   மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் (திருமங்கலம்), திரு ரகுபதி அவர்களும், மணியம்மை பள்ளி தாளாளர் பி வரதராசன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து குழந்தைகள் கதைகளை கூற தொடங்கினார்கள். 


கின்னஸ் உலக சாதனை நிகழ்வில் ,

ஆயிஷா நடராசன், விழியன், விஷ்ணுபுரம் சரவணன், சுகுமாரன், சரிதா ஜோ, யெஸ்.பாலபாரதி, ஆதிவள்ளியப்பன், உதயசங்கர், கன்னிக்கோவில் ராஜா, கார்த்திகாகவின்குமார்  உள்ளிட்ட சமகால எழுத்தாளர்களின் 100 கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.


ஒரு காக்கா நரி வடை யில்லை

தெனாலிராமன், பீர்பால், முல்லா கதைகளில்லை. 

மகாபாரத, ராமாயாணக்கதையில்லை. குரான், பைபிள் கதையில்லை.

நாட்டுப்புறக்கதையில்லை.


100 குழந்தைகளும் சமகாலத்தைப் பேசும் சமகாலக்கதைகளையே சொன்னார்கள்.


நிகழ்ச்சி மதுரை பண்பலையில் ‘ உங்களைத் தேடி ‘ என்ற நிகழ்ச்சியில் நேரலையாக காலை 11 மணி முதல் 12 மணி வரை ஒலிபரப்பானது. 

நிழ்வினைப் பற்றிய செய்திகள் இந்து தமிழ் திசை , தினமலர், மாலை முரசு , தினகரன் போன்ற நாளிதழ்களில் வெளியானது . 

அரசுப் பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். மைக்குடி , விடத்தகுளம் போன்ற கிராமங்களிலிருந்து வந்திருந்த மாணவர்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர்

.


தொடர்ச்சியாக 100 குழந்தைகள் 100 கதைகளை கூற நிகழ்வு மாலை நான்கு மணிக்கு நிறைவுற்றது. 


கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலிருந்து சைமோன் நடேசன் , வழக்கறிஞர் சுரேஷ் லிவிங்டன் தாஸ், ஆகியோர் வந்திருந்தனர்.  கதைகளைக் கூறிய மாணவர்கள் அனைவருக்கும் உலகச் சாதனை சான்றிதழும் , கேடயமும், பதக்கமும் அளித்து பாராட்டு அளிக்கப்பட்டது.


அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கவிக்குயில் கணேசன், ஆசிரியர்கள் சிவா , சரவணன், எழுத்தாளர் அமுதா செல்வி, அனுசுயா , பாரதி இலக்கியப் பேரவை முருகன் , திருக்குறள் வளர்ச்சிப் பட்டறை விஸ்வநாததாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக நிறைவுரையை கவிஞர் துளிர் வழங்க நன்றியுரையினை  முனைவர் ஜோசப்பின் மேரி வழங்க விழா இனிதே நிறைவுற்றது.


மு.சுலைகா பானு
மு.சுலைகா பானு

34 வருட ஆசிரியப்பணி

50க்கும் மேற்பட்ட அமைப்புகளில் ஆசிரியப் பணி & கல்விச் சேவைக்காக விருது வழங்கி பாராட்டியுள்ளனர் .

⁠தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது

⁠42 மணி நேரம் 19 நிமிடம் தொடர் கற்பித்தலில் உலக சாதனை ( Teaching Marathon )



Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page