பாட்டுப்பாடுவோமா!
- செந்தில்பாலா
- Jul 15
- 1 min read

1.கப்சிப்
நாயுக்கும் நாயுக்கும் சண்டையாம்
பூனையும் பூனையும் பார்த்ததாம்
பூனைக்கும் பூனைக்கும் சண்டையாம்
எலியும் எலியும் பார்த்ததாம்
எலிக்கும் எலிக்கும் சண்டையாம்
பல்லியும் பல்லியும் பார்த்ததாம்
பல்லிக்கும் பல்லிக்கும் சண்டையாம்
பொத்து பொத்துன்னு விழுந்ததாம்
பொத்து பொத்துன்னு விழுந்ததும்
கப்பு சிப்புன்னு இருந்ததாம்.

2.மாமா வீட்டுத்தோட்டம்
மாமா வீட்டுத் தோட்டம்
மாடி யிலே இருக்குது
மாறா வந்து பாரேன்
அதிச யமாய் இருக்குது
சின்னஞ் சிறியத் தொட்டிகள்
செடியைத் தாங்கி நிற்குது
புடலை பாகற் காய்களோ
தலைக்கு மேலே தொங்குது
கத்திரிக்காய் செடி எல்லாம்
பூத்து காய்த்து கிடக்குது
தக்காளி செடி கூட
பழுத்து பளுவில் தொங்குது
குழம்புக் கேற்ற செடிகொடிகள்
பந்த லிலே படருது
பூச் செடிகள் பழவகைகள்
கீரை களும் வளருது
மாமா வீட்டுத் தோட்டம்
மாடி யிலே இருக்குது
மாறா வந்து பாரேன்
அதிச யமாய் இருக்குது
Comments