பட்டம்
- மாலதி

- Feb 15
- 1 min read
Updated: Feb 17

பட்டம் பார் பட்டம் பார்!
படபடன்னு பறக்குது பார்!
சுட்டிப் பையன் கையிலே
சுற்றி வைத்த நூல்விட்டே
பட்டம் பார் பட்டம் பார்!
படபடன்னு பறக்குது பார்!
வண்ணம் பல அதிலே
வடிவம் கூட அழகே!
காற்று அடிக்கும் திசையிலே
பட்டம் பறக்கும் வாலோடே!
பட்டம் பட்டம் பார்!
படபடன்னு பறக்குது பார்!
எங்களுடன் ஆட வா
நிலா நிலா ஓடி வா!
நீ இருப்பது வானிலா?
வட்ட வடிவ வெண்ணிலா
வண்ணத்தில் வெண்மையா?
பிட்டு உன்னைப் பார்க்கவா?
கிட்டே நீயும் வருவாயா?
நிலா நிலா ஓடி வா!
எங்களுடன் ஆட வா!
நட்சத்திரம் கூட்டி வா!
நாமும் போவோம் ஓர் உலா!

கவிஞர், எழுத்தாளர், மாலதி இராமலிங்கம் எழுதிய 3 நூல்களில் ஒன்று தமிழகத்தின் 32 மாவட்ட அரசு நூலகங்களில் 800 நூல்களும் புதுச்சேரி அரசின் நூலகங்களில் 2 நூல்கள், தலா 74 நூல்களும் இடம்பெற்று உள்ளன.





Comments