top of page

குடை ராட்டினம்


குதிரை புலி சிங்கம் எல்லாம்

ஒன்றை ஒன்று விரட்டுது! இதில்

எவரும் முந்தி போகவில்லை

இருந்த இடத்தில் இருக்குது!


சுற்றிச் சுற்றி வருகுது பார்

குடைராட்டினம் - இதில்

விட்ட இடம் தொட்ட இடம்

எதுவும் தெரியல!


வட்டமான சக்கரத்தில்

முன்னே பின்னே ஏது

விளையாட்டில் எப்போதும்

மகிழ்ச்சியையே தேடு!


குதிரை மேலே போகும் குழந்தை

குதிச்சு குதிச்சு சிரிக்குது!

புலிக்காதை திருகி ஒன்னு

போபோன்னு விரட்டுது !


சுற்றி முடித்து வந்த பின்னே

இறங்கிப் போகலாம் - இதில்

வெற்றி தோல்வி எதுவும் இல்லை

கொண்டாட்டம்தான்!


குருங்குளம் முத்துராஜா
குருங்குளம் முத்துராஜா

சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள குருங்குளம்

 பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர்.

 இவரது முதல் நூல் 'பாட்டும் பாடமும்' தொடந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் " (எதிர் வெளியீடு) 2024

கொ மா கோதண்டம் நினைவு த மு எ க ச வின் சிறார் இலக்கிய விருது பெற்றுள்ளது

தனது சில பாடல்களை youtube : Muthu Raja Teacher இல் இசையுடன் காணொளியாக வெளியிட்டுள்ளார்.


1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
May 02
Rated 5 out of 5 stars.

சிறப்பான குழந்தைகள் விளையாட்டு பாடல்🎶🎶 வாழ்த்துகள் 💐💐

Like
bottom of page