top of page

பாறை ஓவியப் (Folk Art) பயிற்சி


தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (நெல்லை கிளை) சார்பில் மார்ச் 9 2026 அன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் (வல்லநாடு தெற்கு) மாணவர்களுக்கு பாறை ஓவியப் (Folk Art) பயிற்சி கொடுக்கப்பட்டது.


எழுத்து கண்டுப்பிடிக்காத கற்காலத்தில், தனது எண்ணங்கள், வாழ்வனுபவங்கள், உணர்வுகள் என அனைத்தையும் பாறைகளில் ஓவியமாக மனிதன் பதிவு செய்தான்.


பழங்கால மனிதனின் கைகளில் இருந்த கலை மொழி, இன்று வல்லநாடு அரசு பள்ளி மாணவர்களின் கைகளில் மீண்டும் உயிர்ப்பெற்றது!


ஓவியம் என்பது கலை மட்டுமல்ல; காற்றில் கரையும் பேச்சுப் போல் அல்லாமல், காலம் கடந்தும் தன் சந்ததியினருக்கு அறிவை கடத்தும் கருவி! ஒலியற்ற மொழி!!


மிகவும் எளிய கருவிகளாலும், இயற்கை பொருட்களாலும் அழகான கலை உருவாக்க முடியும் என்பது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆச்சரியமூட்டுவதாக இருந்தது!


மேலும், கலைத் திறமைகளுக்கு சிறந்த தொழில் வாய்ப்புகளும் இருப்பதை திரு. லெனின் அவர்கள் எடுத்துரைத்தார்.


திரு. லெனின் அவர்கள் பாறை ஓவியங்களின் நுட்பங்களை மாணவர்களுக்கு அழகாக கற்றுக்கொடுத்தார்.


மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தாங்களே உருவாக்கிய கலைப்பணிகளைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். ஒருவரின் படைப்பை மற்றொருவர் பாராட்டிய தருணங்கள் மனதை நெகிழச் செய்தன.


மாணவர்களின் உற்சாகத்தை பார்த்து, ஆசிரியர்களும் பாறை ஓவியம் வரைய ஆரம்பித்தது நிகழ்ச்சிக்கு மேலும் உயிரூட்டியது.


பள்ளி வளாகம் முழுவதும் கலை, சிரிப்பு, ஆச்சரியம், ஆர்வம் நிறைந்திருந்தது.



இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கிய பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி டிலைட் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


மேலும், “பள்ளி மாணவர்களுக்கு இப்படிப் பட்ட கலை அனுபவம் கிடைக்க வேண்டும்” என்ற எண்ணத்துடன் எங்களை தொடர்பு கொண்ட திரு. வேலாயுதம் ஆசிரியர் அவர்களுக்கும் எங்களின் சிறப்பு நன்றி.


நிகழ்ச்சியின் போது மாணவர்களுடன் இணைந்து கலைச் செயல்பாடுகளில் ஈடுபட்டு அனைவரையும் ஊக்கப்படுத்திய திருமதி. ஜெயந்தி மற்றும் பிற ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.


இது போன்ற முயற்சிகள் மூலம் மேலும் பல பள்ளிகளில் குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக்கொணர முடியும் என்ற நம்பிக்கையுடன்,


தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் - திருநெல்வேலி கிளை.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page