top of page

வாசிப்புக்களம்


4/7/26 (சனிக்கிழமை) மாலை 4 மணியளவில் தூத்துக்குடி சிறகுகள் சிறார் நூலகத்தில் வாசிப்புக்களம் - 58 ஆவது நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 


நிகழ்வில் புத்தகத் தூதுவர் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 


வாசிப்பு இயக்கப் பாடலுடன் நிகழ்வு ஆரம்பமானது. 


நினைவுத் திறனைக் கூர்மைப்படுத்தும் சிறிய விளையாட்டு விளையாடி குழந்தைகள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். 


ஆத்தூர் அறிவுச் சுடர் நூலக ஒருங்கிணைப்பாளர் தோழர் சண்முக வடிவு அவர்களும்,ஆத்தூர் வாசிப்பை நேசிப்போம் நூலக ஒருங்கிணைப்பாளர் பூஜா ஸ்ரீ அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு  புத்தகத் தூதுவர் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புத்தகங்களை அறிமுகம் செய்து குழந்தைகளிடம் சிறப்பாக  கலந்துரையாடினார்கள். 


பூஜா ஸ்ரீ அவர்களின் பிறந்த நாள் (5/7/26) பரிசாக ஆத்தூர் அறிவுச் சுடர்  நூலகம் சார்பாக வகுப்பறை புதிது புத்தகமும், சிறகுகள் சிறார் நூலகம் சார்பாக நூலக மனிதர்கள் புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டது. 


அனைத்து குழந்தைகளும் தங்கள் மனதில் பிறக்கும் வார்த்தைகள் மூலம் பூஜா ஸ்ரீக்கு வாழ்த்து தெரிவித்தது புதுமையாக இருந்தது. 



கார்த்திக் சுதன் தன்னுடைய பிறந்த நாள் (3/7/26) பரிசாக அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். 


பண்டித ரமாபாய் நூலகத்தின் பெயர் - அன்னை ரமாபாய் நூலகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிய நூலக ஒருங்கிணைப்பாளர் 7ஆம் வகுப்பு முத்துமாரியிடம் புத்தகங்கள் ஒப்படைக்கப்பட்டது. 


நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பேனா பரிசு வழங்கி நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page