top of page

ஈமு


சிறியதாக இருக்கமாட்டேன்

சிறகிருந்தும் பறக்கமாட்டேன்

என்ன பறவை நான்? அட

என்ன பறவை நான்?


நெருப்புக்கோழி போலிருப்பேன்

நெடுந்தூரம் நடந்துசெல்வேன்

என்ன பறவை நான்? அட

என்ன பறவை நான்?


முரசு போல குரல் கொடுப்பேன்

முழுவீச்சில் ஓடிடுவேன்

என்ன பறவை நான்? அட

என்ன பறவை நான்?


பச்சைநிற முட்டையிடுவேன்

பூச்சியும் பழமும் தின்பேன்

என்ன பறவை நான்? அட

என்ன பறவை நான்?


ஆஸ்ட்ரேலியாவில் வசிப்பேன்

அரசு முத்திரையில் இருப்பேன்

என்ன பறவை நான்? அட

என்ன பறவை நான்?


தெரியலையா?

ஈமு பறவை நான்! அட

ஈமு பறவை நான்!


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page