செல்லப்பாவும் முத்தப்பாவும்

செல்லப்பா செல்லப்பா கையில் என்னடா?
முத்தப்பா முத்தப்பா வெண்ணெய் முறுக்குடா
செல்லப்பா செல்லப்பா பையில் என்னடா?
முத்தப்பா முத்தப்பா கடலை உருண்டைடா
செல்லப்பா செல்லப்பா கையில் என்னடா?
முத்தப்பா முத்தப்பா அவித்த கிழங்குடா
செல்லப்பா செல்லப்பா பையில் என்னடா?
முத்தப்பா முத்தப்பா கொய்யாப் பழமடா
செல்லப்பா செல்லப்பா திட்டம் என்னடா?
முத்தப்பா முத்தப்பா நிழலில் ஒதுங்குடா
ஆளுக்கொரு குத்துக்கல்லில் அமர்ந்துகொள்வோம்
ஒவ்வொன்றாய் எடுத்தெடுத்து சுவைத்துப் பார்ப்போம்

இயற்பெயர் பாஸ்கரன். கர்நாடகத் தொலைதொடர்புத் துறை நிறுவனத்தில் கோட்டப்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தமிழில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, குழந்தை இலக்கியம் என எல்லா தளங்களிலும் தனித்தன்மையோடு இயங்கி வரும் முக்கியமான படைப்பாளி. 'யானை சவாரி', 'மீசைக்கார பூனை', 'எட்டு மாம்பழங்கள்' ஆகியவை இவரது குழந்தைப்பாடல் நூல்கள்.






Comments