top of page

பாப்பாவே பயப்படாதே


அம்மா உன்னை அணைப்பது,

அன்பு தரும் தொடுதலே,

அப்பா கையைப் பிடிப்பது,

பாசம் தரும் தொடுதலே!


ஆசிரியர் கை கொடுப்பது

திறமைக்கான பாராட்டு!

நண்பன் தோளைத் தட்டினால்

சந்தோஷத்தின் தொடுதலே!


பிடிக்காத தொடுதலை

யாரும் செய்யக் கூடாதே,


“வேண்டாம்! வேண்டாம்!”

சொல்லிவிடு,

அங்கிருந்து ஓடிவிடு!


நம்பும் ஆளைக் கூப்பிடு!

நடந்ததையே கூறிடு!


அ.கீர்த்திவர்மன்
அ.கீர்த்திவர்மன்

வால்பாறையில் வசிக்கும் இவர், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் மற்றும் கல்வியியல்புலம் பயிற்சி பெற்று ஆசிரியராக பணியாற்றுகிறார். குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதி வருகிறார்.


1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
sivamrider307@gmail.com
16 hours ago
Rated 5 out of 5 stars.

❤️

Like
bottom of page