top of page

குட்டி மணி

8 hours ago
1 min read

குட்டி மணி நித்தமும்

எட்டு மணி ஆனதும்

தட்டு நிறைய பாலினை

கேட்டு வாங்கி குடித்திடும்...

 

கிட்டு தாத்தா சன்னலை

எட்டி எட்டி பார்த்திடும்

குட்டி குட்டி வாலினை

ஆட்டி ஆட்டி கூப்பிடும்...

 

கிட்ட வரும் தாத்தாவை

எட்டிக் குதித்து கொஞ்சிடும்

பட்டு போன்ற மேனியை

தொட்டு தடவ சொல்லிடும்.


 சு.இளவரசி
 சு.இளவரசி

   தமுஎகச அறம் கிளையின் துணைச் செயலாளராகச் செயலாற்றி வருகிறார். தமுஎகச அறம் – முகிழ் வாசிப்பறை எனும் சிறார் இலக்கியக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்.

 மருத்துவர், எழுத்தாளர், கதைசொல்லி எனப் பன்முகத் தளங்களில் இயங்கி வரும் இவர், ‘மூங்கிலில் துளை தேடும் காற்று’ எனும் ஹைக்கூ கவிதை நூல் உள்ளிட்ட மூன்று நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் பல்வேறு இணைய மற்றும் அச்சு இதழ்களிலும், தொகுப்பு நூல்களிலும் வெளியாகியுள்ளன.


1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
ரா.சண்முகலட்சுமி
3 hours ago
Rated 5 out of 5 stars.

குழந்தைகளுக்கான பாடல் முதல் முயற்சிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தோழர்.அருமையா இருக்கு தோழர்

Like
bottom of page