களிமண் சிற்பம் பயிலரங்கம்
- தேவர்பிரான்
- 19 hours ago
- 1 min read

3-3-26 அன்று தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் – நெல்லை கிளையின் சார்பில், அரசு பள்ளியில் “களிமண் சிற்பம்” பயிற்சி முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது.
இளம் தலைமுறையின் படைப்பாற்றலை வளர்க்கும் நோக்குடன் இந்நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது.
இப்பயிற்சியை நடத்த சிற்பக் கலைஞர் சிற்பி பாலா அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.
முதல் அமர்வு – விளக்கமும் காட்சியும்
சிற்பி பாலா அவர்கள்,
• களிமண்ணின் தன்மை
• அதை எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது
• கைகளால் வடிவமைக்கும் முறைகள்
• எளிய வடிவங்களில் சிற்பம் உருவாக்கும் அடிப்படை நுட்பங்கள்
என அனைத்தையும் நேரடியாக விளக்கினார்.
நவீன கார்ட்டூன் கதாபாத்திரங்களைத் தவிர்த்து, இயற்கையை மையமாகக் கொண்ட வடிவங்கள் மட்டுமே உருவாக்குமாறு மாணவர்களுக்கு வழிகாட்டப்பட்டது.

அதன்படி மாணவர்கள்,
• யானை
• ஆடு
• பறவைகள்
• மரக்கிளை மற்றும் கூடு
போன்ற இயற்கைச் சார்ந்த வடிவங்களைச் செய்ய கற்றுக் கொடுக்கப்பட்டது. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக் கொண்டனர்.
சிற்பியின் விளக்கங்களை கவனமாகக் கேட்டதோடு, உடனே தங்கள் கைகளால் முயற்சி செய்யத் தொடங்கினர்.
மதிய உணவுக்குப் பிறகு, இரண்டாம் அமர்வு தொடங்கப்பட்டது.
இந்த அமர்வில், மாணவர்கள் தாங்களாகவே கற்பனை செய்து சிற்பங்களை உருவாக்க ஊக்குவிக்கப்பட்டனர்.
இதில் வெளிப்பட்ட சிந்தனைகள் மிகவும் ஆச்சரியப்படுத்தியது:
• சில மாணவர்கள் “யானைக்கான வீடு” ஒன்றை களிமண்ணால் உருவாக்கினர்.
• சிலர் வெளியில் சென்று புல்லைக் கொண்டு வந்து, தாங்கள் செய்த யானையின் அருகில் தீவனமாக வைத்தனர்.
• சில மாணவிகள் களிமண் தட்டுகளை செய்து, அதில் களிமண் உருண்டைகளை யானைக்கு உணவாக வைத்தனர்.
மொத்தமாக இன்று சுமார் 50 களிமண் சிற்பங்கள் மாணவர்களால் உருவாக்கப்பட்டன.
உருவாக்கப்பட்ட அனைத்து சிற்பங்களும் பள்ளி வளாகத்தில் அழகாக ஒழுங்குபடுத்தி காட்சிக்கு வைக்கப்பட்டன.
மற்ற வகுப்புகளில் இருந்த மாணவர்களும் சிற்பங்களைப் பார்வையிட்டனர். நண்பர்களின் ஆச்சரியம், பாராட்டு, மகிழ்ச்சி ஆகியவை அந்தச் சிற்பங்களின் மதிப்பை மேலும் உயர்த்தின.
நிகழ்ச்சியின் இறுதியில், ஒவ்வொரு மாணவரும் தாங்கள் உருவாக்கிய சிற்பத்தை நினைவாக பெற்றுச் சென்றனர்.
மாணவர்களின் முகங்களில் தெரிந்த ஆனந்தமும் பெருமையும், இந்த நிகழ்வின் வெற்றியை உறுதிப்படுத்தியது.
ஆசிரியர் திரு. துரைப்பாண்டி அவர்கள் நிகழ்வை திறம்பட ஒருங்கிணைத்தார்.

2014ஆம் ஆண்டு, உள்ளூர் இயற்கை விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு நேரடி சந்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், மனைவி சத்தியா அவர்களுடன் சேர்ந்து ஒரு தள்ளுவண்டியில் இயற்கை பொருட்கள் விற்பனையைத் தொடங்கியவர். இயற்கை விவசாயிகளை ஆதரிப்பதோடு, மக்களிடையே சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய நெல் வகைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கி வருகிறார்.





Comments