top of page

வாசிப்புப் பண்பாடும் சிறார் இலக்கியமும்


சிறார் வாசிப்பு: அனுபவப் பகிர்வுகளும் சமூக முயற்சிகளும்

 

குழந்தைகள் வாசிக்கவேண்டும் என்பது நம் எல்லோரின் விருப்பமாக உள்ளது.

வாசிப்பு என்ன செய்யும்? என்று கேட்டால் நம் எல்லோருக்குமே பதில் சொல்லத்தெரியும்.


சிறந்த மனிதனை உருவாக்கும்.

சிந்தனையை ஆழமாக்கும்.

தேவையற்ற செயல்பாடுகளிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும்.

நன் மதிப்புடையவராக வாழ வழிவகுக்கும்.

உறவை வளர்க்கிறது.

சிரிக்க, அழவைக்கிறது.

பல்வேறு துறைகளைப் பற்றிய ஆர்வமும் அறிவும் விருப்பமும் இருக்கும்.

படைப்பூக்கம், மகிழ்வு, நிதானம்...என சொல்லிக் கொண்டே போகலாம்.


அதோடு நம்மில் பலருக்கு நாம் கல்வி என்ற பெயரில் நாம் பெற்ற பட்டத்திற்கும் நாம் பெற்றுள்ள அல்லது நாம் கைவரப்பட்ட வாசிப்புப் பழக்கத்திற்கும் பல நேரங்களில் தொடர்பற்றுப் போகிறது. 


இப்பண்புகளைப் பெறுவது நம் ஒவ்வொருவரின் விருப்பமாக இல்லாமல் இருக்குமா என்ன? இருந்தபோதும் அது எளிதானதாக இல்லையோ என்று யோசிக்கும்படியாகிவிடுகிறது. சுலபமாக நம்மை வந்தடைவதில்லை. அல்லது அதற்கான தொடர் முயற்சிக்குள் பயணிப்பதற்கு பதிலாக நாம் அதை அமைதியாகக் கடந்துவிடுகிறோம். அப்பழக்கத்தைக் கைவிட்டுவிடுகிறோம். அதைப் பற்றிய கவலை எதுவும் இல்லை என்பது போல் காட்டிக் கொள்கிறோம். 


வாசிப்பை நேசிப்பவர்கள் வாசிப்பிற்குள் பயணித்த அனுபவம் என்பது அலாதியானது.  அவர்கள் அதை பெற்ற அனுபவமும் வித்தியாச வித்தியாசமாக உள்ளது. தொடர் வாசிப்புப் பழக்கமுடையவர்கள் சிலருடன் உரையாடும்பொழுது அவர்களின் பகிர்வு முக்கியமானதாக உள்ளதால் சிலவற்றை இங்கு பார்ப்போம்.


-   சிறுவயதிலேயே இலக்கிய வாசிப்பில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது.


-   படிப்பை அறிவுத்தேடலுடன் சமூக மாற்றத்துடன் இணைக்கப் பழகிக் கொள்ளும் சூழலுடன் இணைந்தோம்.


-   பைபிள், குரான், தேவாரம், திருவாசகம் என  மதம் சார்ந்த, சங்கத் தமிழைப் பாடும் படிக்கும் குடும்ப சூழலில் பிறந்து வளர்ந்ததால்.


-  நாடகங்கள் பார்ப்பது, மலிவு விலை ரஷ்ய புத்தகங்கள் வீட்டில் வாங்கிக் கொடுத்தது, அம்புலிமாமா, வாண்டுமாமா... சிறார் இதழ்கள், பெரியார் படிப்பகம், இடதுசாரி இயக்கங்களின் படிப்பகங்கள், எழுத்தாளர் சங்கங்கள்....


-  வாசிப்பு இயக்கங்கள், அறிவியல் இயக்கத்தின், அறிவொளி இயக்கத்தின் வாசிப்புச் செயல்பாடுகள்... போன்றவை ஒரு பண்பாட்டுச் செயல்பாடாக முன்னெடுத்த முயற்சிகளில் இணைத்துக் கொண்டது.


-   அழ வள்ளியப்பா சிறார் சங்க வாசிப்பு முயற்சிகள் என முன்னெடுக்கப்பட்டன


-   அக்கா , அம்மா, தாத்தா...புத்தகங்களைப் படிப்பவர்களாக இருப்பதால் என ஏகப்பட்ட காரணங்களை நினைவுகூர்ந்தனர்.

  

இதேபோல் படிக்கத் தெரிந்தும், உயரிய மதிப்பெண்களைப் பெற்றிருந்த போதும் பெரிய பட்டங்களைப் பெற்றிருந்த போதும், பெரும் பதவிகளை வகித்தபோதும் புத்தக வாசிப்பில் ஈடுபட  முடியாமல் போவதற்கான காரணங்களையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.


சாலை செல்வம்
சாலை செல்வம்

பெண்ணியலாளர், கல்வியியலாளர்,

30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி உரிமை, மாற்றுக்கல்வி குறித்து பல நூல்களை எழுதியிருக்கிறார்.

புனைவு, மொழிபெயர்ப்பு, கட்டுரை, குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page