top of page

AM மற்றும் PM – நேரத்தை அறியும் முறை

8 hours ago
1 min read

ஒரு நாளில் மொத்தம் 24 மணி நேரம் உள்ளன என்பதை நாம் அறிவோம். ஆனால் நாம் பயன்படுத்தும் 12 மணி நேரக் கடிகார முறையில், ஒரு நாள் என்பது AM, PM என்று இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது அல்லவா? அவை எதைக் குறிக்கின்றன? 


இந்த இரண்டு சொற்களும் லத்தீன் மொழியிலிருந்து வந்தவை. Meridiem என்பது லத்தீன் மொழியில் “நண்பகல்” அல்லது “மதியம்” என்று பொருள்படும் சொல். இதை அடிப்படையாகக் கொண்டே AM, PM என்ற சுருக்கங்கள் உருவாகியுள்ளன.


AM என்பது Ante Meridiem என்பதன் சுருக்கம். இங்கு Ante என்றால் “முன்” என்றும், Meridiem என்றால் “நண்பகல்” என்றும் பொருள். எனவே Ante Meridiem என்பது நண்பகலுக்கு முன். நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையிலான நேரம் AM எனப்படுகிறது. அதிகாலை 5 மணி, காலை 8 மணி, காலை 11 மணி ஆகியவை முறையே 5:00 AM, 8:00 AM, 11:00 AM என்று குறிப்பிடப்படுகின்றன.


PM என்பது Post Meridiem என்பதன் சுருக்கம். இங்கு Post என்றால் “பின்” என்றும், Meridiem என்றால் “நண்பகல்” என்றும் பொருள். எனவே Post Meridiem என்பது நண்பகலுக்குப் பின். மதியம் 12 மணி முதல் அடுத்த நாள் நள்ளிரவு 12 மணி வரை உள்ள நேரம் PM எனப்படுகிறது. பிற்பகல்

2 மணி, மாலை 6 மணி, இரவு 9 மணி ஆகியவை 2:00 PM, 6:00 PM, 9:00 PM என்று குறிப்பிடப்படுகின்றன.


இதில் 12:00 AM மற்றும் 12:00 PM ஆகியவற்றைச் சரியாகப் புரிந்துகொள்வது முக்கியம். 12:00 AM என்பது நள்ளிரவு 12 மணி. இது ஒரு புதிய நாள் தொடங்கும் நேரம். 12:00 PM என்பதை நண்பகல் என்று குறிப்பிடுகிறோம். 


இந்த நேரக் குறியீடுகள் கடிகார நேரம், பயண அட்டவணை, பள்ளி மற்றும் அலுவலக நேரம் போன்றவற்றைக் குறிப்பிடுவதில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.


ஹரீஷ்

 

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் விஞ்ஞானத் துளிர் - சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழின் இணையாசிரியர்.

header.all-comments

ratings-display.rating-aria-label
header.no-ratings-yet

comment-box.add-a-rating
bottom of page