top of page

கருப்பு என்றால்....


கருப்பு என்றால் அழுக்கு இல்லை

கண் கவரும் நிறம் தான்- அதைக்

கண்டவுடன் வெறுப் பெதற்கு

காட்சிக்கு அது வரம்தான்!


கருப்பு என்றால் தாழ்வு இல்லை

கார்மேகம் பார் மேலே - அது

கனிவுடனே மழை பொழிந்து

பார் முழுதும் காக்கும் !


கருப்பு என்றால் எளிமையில்லை

கரியில் பிறக்கும் வைரம்- தன்

வலிமை காட்டி சுடரெனவே

வையகத்தில் ஒளிரும்!


கருப்பு என்றால் துக்கம் இல்லை

கருங்குயிலின் பாட்டு

கரை புரளும் மகிழ்ச்சி - அதை

காதுகளில் கேட்டு!


கருப்பு என்றால் இகழ்ச்சி இல்லை

கண்டோம் மண் டேலா

அதிபர் ஆகி நோபல் வென்று

அடைந்த புகழின் உச்சி!


குருங்குளம் முத்து ராஜா
குருங்குளம் முத்து ராஜா

சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள குருங்குளம்

 பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர்.

 இவரது முதல் நூல் 'பாட்டும் பாடமும்' தொடந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் " (எதிர் வெளியீடு) 2024

கொ மா கோதண்டம் நினைவு த மு எ க ச வின் சிறார் இலக்கிய விருது பெற்றுள்ளது

தனது சில பாடல்களை youtube : Muthu Raja Teacher இல் இசையுடன் காணொளியாக வெளியிட்டுள்ளார்.


2 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
கல்யாணிஶ்ரீதர்
Apr 15
Rated 5 out of 5 stars.

கறுப்பு வெளுப்பு ஒழிப்பு பாடல் சிறப்பு !

Like

Guest
Apr 15
Rated 5 out of 5 stars.

சிறப்பு !

👌


Like
bottom of page