top of page

காலப்பெட்டகம்

அழ.வள்ளியப்பா குழந்தைப்பாடல்கள்


ree

மியாவ் மியாவ் பூனையார்


மியாவ் மியாவ் பூனையார்

 மீசைக் காரப் பூனையார்.


ஆளில் லாத வேளையில்

 அடுக்க ளைக்குள் செல்லுவார்

பால் இருக்கும் சட்டியைப்

 பார்த்துக் காலி பண்ணுவார்

மியாவ் மியாவ் பூனையார்.


மீசைக் காரப் பூனையார். 

இரவில் எல்லாம் சுற்றுவார். 

எலிகள் வேட்டை ஆடுவார்

. பரணியில் ஏறிக் கொள்ளுவார்

. பகலில் அங்கே தூங்குவார். 

மியாவ் மியாவ் பூனையார். 

மீசைக் காரப் பூனையார்.


மெல்ல மெல்லச் செல்லுவார்.

 மேலும் கீழும் தாவுவார்.

'ளொள்ளொள்' சத்தம் கேட்டதும்

நொடியில் ஓடிப் பதுங்குவார்.

 மியாவ் மியாவ் பூனையார்.

 மீசைக் காரப் பூனையார்.


ree

நேரு தந்த யானை


டில்லிக்குப் போனேன், 

நேருவைப் பார்த்தேன், '

சல்யூட்' செய்தேன். 

சாக்லேட் தந்தார்.


என்னடா கண்ணு 

ஏதடா வேணும்? 

சொன்னால் தருவேன். 

சொல்வாய்' என்றார்.


'அன்புள்ள மாமா, 

அவசியம் வேணும், 

சின்னதாய் யானை

 சீக்கிரம் தருவீர்'


என்றேன். காகிதம்

எடுத்தார் உடனே


என்னவோ அதிலே 

எழுதிக் கொடுத்தார்.


பார்த்தேன் அதையே. 

படத்தில் யானை!

 பார்த்தேன் அவரை. 

பக்கெனச் சிரித்தார்.


'யானைநீ கேட்டாய். 

அன்புடன் தந்தேன். 

தீனியே வேண்டாம். 

செலவுமே இல்லை.


அடக்கமா யிருக்கும். 

அங்குசம் வேண்டாம்.

 மடித்துநீ பைக்குள் 

வைத்திடு' என்றார்.


ஜோர் ஜோர் யானை!

ஷோக்கான யானை! 

யார்தான் தருவார் 

இதுபோல் யானை?


தலைவர் தந்தார் 

தங்கக் கையால், 

விலைக்கா வேண்டும்? 

விற்கவே மாட்டேன்!


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page