top of page

சிறுவர் நாடகம் - நேற்று இன்று நாளை.


மீசையை முறுக்கிக்கொண்டு பேசு இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை இன்றும் பள்ளி வளாகங்களில் நாடகமாக பார்க்க முடிகிறது. பள்ளிகளில் நிகழ்த்தப்படும் நாடகங்கள் மூலமாக ஒரு குழந்தைக்கு நாடகம் என்கிற கலை அறிமுகம் ஆகிறது... நம்மில் பலருக்கும் இந்த

கலை அவ்வாறே அறிமுகமாகிறது.


எவ்வாறு கணிதம், அறிவியல், ஆங்கிலம் என அனைத்தும் துறைகளும் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படுகிறதோ , அதேபோல் கலைகளும் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. ஆனால் கணிதம், அறிவியல்,

ஆங்கிலம் போன்றவை அடிப்படையில் இருந்து எவ்வளவு தெளிவாகவும் கவனமாகவும் மிகுந்த தேர்ந்த தகுதியுடைய ஆசிரியர்கள் கொண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது... ஆனால், கலைகள் அவ்வாறு அறிமுகப்படுத்தபடுவதில்லை. எப்போதும் பள்ளி வளாகத்தில் இருக்கும் ஆர்வமிகு ஆசிரியர்களை கொண்டு உருவாக்கப்பட்டு நிகழ்த்தப்படுகிறது.


இந்த நாடகங்களின் நோக்கம் வளாகத்தில் நடக்கின்ற சடங்கு செயல்பாடுகள் அதாவது பள்ளியின் ஆண்டு விழாக்கள் அல்லது பள்ளியில் நடைபெறும் கொண்டாட்ட நிகழ்வுகள் போன்றவற்றில் நிகழ்த்தப்படும் கலை நிகழ்வுகள் மட்டுமே என்று இருந்தபோதிலும் இவற்றை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் , ஏனென்றால் சமூகத்தின் பெரும்பான்மை மக்களுக்கும் இந்த பள்ளி வளாக நாடகங்களில்

வழியாகவே கலைகளும், நாடக அறிமுகமகிறது.. அவ்வாறு அறிமுகமாகின்ற நாடகக்கலை எப்படி அறிமுகப்படுத்தப்படுகிறது?...


பள்ளி வளாகங்களில் நடத்தப்படும் நாடகங்களும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும் அந்த நாடகங்களிலும் பகுத்தறிவுக்கு புறம்பான அறிவியலுக்கு எதிரான உயர்வு தாழ்வை போதிக்கின்ற கருத்துக்கள், கொண்டாட்டங்கள் என்கிற பெயரிலோ, புராணங்கள், என்ற

பெயர்களோ நிகழ்த்தப்படுவது சமூகத்தில் விஷத்தை விதைப்பதற்கு சமமான ஒன்றாகவே கருதப்பட வேண்டும்... ஏனென்றால் குழந்தைகளை பொறுத்தவரை பள்ளி வளாகங்களில் நடப்பவை அனைத்தும் உண்மையானவை, மேன்மையானவை.


உள்ளடக்கம் அடிப்படையில் மட்டுமே அல்லாமல் அதனை நிகழ்த்த திறன் அடிப்படையிலும் வளாக நாடகங்களில் பெரும்பான்மையான நாடகங்கள் ஓதாமையை கொண்டிருக்கிறது இந்தப் போதாமைகளோடு நிகழ்த்தப்படும் நாடகங்கள் முழு நாடகங்கள் அல்ல! முழு நாடக வடிவங்கள் அல்ல!. இன்று வரை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் நாடகங்கள் தமிழ்நாடு பொறுத்த

வரை இவ்வாறாகவே இருக்கிறது. குழந்தைகளுக்கு தங்கள் கதைகளை சொல்வதற்கான ஒரு கலையாக, தங்கள் சமூகத்தின் பிரச்சனைகளை பேசும் இடமாக, தங்களின் கற்பனைக்குஉருவம்

கொடுக்கும் ஒரு கலையாக, நாடகம் அறிமுகப்படுத்தப்படாமல் வெறும் சடங்காக மட்டுமே அறிமுகப்படுத்தப்படுவது மிகப்பெரிய ஆபத்தை நாடகக் கலைக்கு உருவாக்கியிருக்கிறது


வரி வடிவ அடிப்படையிலும் தமிழில் இருக்கும் நாடகங்கள் வெறும் உரையாடல்களாகவே துவங்குகிறது ஆங்கிலத்தில் இருக்கும் நாடகங்களில் மேடை வர்ணனை என்கிற முழு வர்ணனைக்குறிப்புகளும் தெளிவாக இடம்பெறுகிறது இலக்கிய வரி வடிவ அடிப்படையிலும் நாடகம் மிகவும்

மேம்போக்காகவே குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.


நாடகக்கலை நேற்று* என்று நாம் பேசுகின்ற பொழுது பள்ளி பாடத்திட்டத்தில் மற்றும் வளாக நாடகங்களில் இன்று வரையும் தீர்க்கப்படாமலும் தொடர்ந்து கொண்டும் இருக்கின்ற பிரச்சனைகளைப் பற்றி பேசித்தான் ஆக வேண்டி இருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் நாடக ஆசிரியர்கள் பற்றிய கோரிக்கை மிகவும் முக்கியமானது. எவ்வாறு ஒரு திறமை இல்லாத ஆசிரியர் கணிதம், அறிவியல் போன்றவற்றை சிறப்பாக குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட முடியாதோ அதேபோல் ஒரு துறை சார்ந்த திறனற்ற ஆசிரியரால்

அறிமுகப்படுத்தப்படும் கலையும் போதாமைகளுடைய புரிந்து கொள்ளப்படும் அந்தப் போதாமைகளோடு புரிந்து கொள்ளப்படுகின்ற கலை குழந்தைகளின் திறன் சார்ந்த

வெளிப்பாட்டில் மிக முக்கியமானதாக இருக்கும் பொழுது அவர்களால் அந்தத் துறையில் திறன்மிகு சமூக மனிதர்களாக உருவாக முடிவதில்லை.


ஒரு துறையில் ஆர்வம் கொண்டு கற்றுக்கொள்ள விரும்பும் குழந்தை கல்லூரியை தாண்டித்தான் கற்றுக் கொள்ள வேண்டியதாக மாறுகிறது. கல்லூரியை தாண்டி கற்றுக் கொள்வதற்கான சமூக பொருளாதார சூழ்நிலைகள் இல்லாத பல திறமை மிக்க குழந்தைகள் தங்களுடைய கனவுகள் பள்ளிகளிலேயே நசுக்கப்படுவதை காண்கிறோம் குழந்தைகளில் இருக்கும் திறமைகளை

முறையாக கண்டுகொள்ளப்படவும், குழந்தை பருவத்திலிருந்தே பயிற்சி எடுத்துக் கொண்டு இலக்கிய அனுபவம் பெற்று உருவாகின்ற குழந்தைகள் கலை அனுபவம் பெற்று உருவாகின்ற


சமூகங்களின் மனிதர்கள் உலகத்தரம் வாய்ந்த இலக்கிய பேராளுமையோடு மிளிர்வதை நாம் பல்வேறு நாடுகளின் சமூகங்களில் கல்விமுறையை உற்று கவனிக்கும்போது தெரிய வருகிறது.


அரசு நடத்துகின்ற கலைத் திருவாக்கல் திருவிழாக்களில் வெற்றி பெறுகின்ற மாணவர்களுக்கும் அல்லது கலை சார்ந்த திறமைகள் இருக்கும் மாணவர்களுக்கும் அதையே முதன்மையாக கொண்டு

படிக்க வேண்டும் என்று விரும்புகின்ற மாணவர்களுக்கும் அரசு பள்ளிகளில் எவ்வாறு 11ஆம் வகுப்புகளுக்கு மேல் அறிவியல் கணிதம் கணிப்பொறியியல் போன்றவற்றிற்கு தனிப்பிரிவுகள்

இருக்கிறதோ அதேபோல் கலை பிரிவுகளுக்கும் தனி பிரிவுகள் இருக்க வேண்டும், அது எல்லாப்பகுதி குழந்தைகளுக்கும் பங்கு கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கப்பட வேண்டும்.


வளாகங்களில் நாடகக் குழுக்கள் அமைத்து அந்த குழுக்கள் தொடர்ந்து பல்வேறு தளங்களில் சடங்கு ஆக நடத்தப்படும் நாடக விழாக்களை தாண்டி அவ்வப்போது அந்த குழு விரும்பும் கருத்திலோ தலைப்பிலோ நாடகம் நடத்தி தங்களின் வெளிப்பாட்டு திறனை வெளிப்படுத்த வாய்ப்புகள் செய்யப்பட வேண்டும்.


வளாகங்களைத் தாண்டி நாடகக் கலைஞர்களால் நிகழ்த்தப்படுகின்ற சிறுவர் நாடகங்களை நாம் மூன்று பிரிவாக பிரிக்கலாம்.

குழந்தைகள் குழந்தைகளுக்காக நிகழ்த்தப்படும் வகை,பெரியவர்கள் குழந்தைகளுக்காக நிகழ்த்தப்படும் வகை, குழந்தைகள் பெரியவர்களுக்காக நிகழ்த்தும் நாடகங்கள். இந்த மூன்று வகைகளையும் செய்வதற்கான மிகப்பெரும் சவால்களை எதிர்கொண்டு தமிழில் நவீன நாடக கலைஞர்கள் பல நாடகங்களை நிகழ்த்தி வந்திருக்கின்றனர்.


ஆனாலும் கதைகளில் இலக்கியங்களில் நிகழ்ந்தது போலவே இதற்கு முந்தைய நாடக நிகழ்வுகளும் அல்லது பெரும்பான்மையான நாடக நிகழ்வுகள் தெனாலிராமன் கதைகளையோ அல்லது ராஜாக்கள் பற்றிய கதைகளையும் அல்லது கடவுள் பற்றிய கதைகளையோ குழந்தைகளை வைத்து நிகழ்த்துவதாகவே இருந்திருக்கிறது அதிலிருந்து விலகி புதிய நாடக

வகைகள் அதன் நிகழ்த்துதல் அடிப்படையிலும், உள்ளடக்கம் அடிப்படையிலும் உருவாக வேண்டும்... அவ்வாறான பல முயற்சிகள் தமிழில் நடந்து கொண்டிருக்கிறது. அது இன்னும் வலுப்பெற வேண்டும்.


குழந்தைகள் நாடகத்தில், பேசப்படாமல் இருக்கின்ற பெண் குழந்தைகளின் பிரச்சனைகள் , சமூக நீதிக் கருத்துக்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கணித

ஆய்வுகள், அறிவியல் பூர்வமான நிகழ்வுகள், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள், குழந்தைகளுக்கு இருக்கின்ற மன அழுத்தங்கள் போன்றவற்றை உரத்து பேசுகின்ற,


குழந்தைகளின் வயதுக்கு ஏற்றபடி நிகழ்த்தி மேடையை அமைத்தோ, மேடையை மாற்றாக பயன்படுத்தியோ உருவாக வேண்டிய தேவை இருக்கிறது.


அவ்வாறு நாடகங்கள் உருவாக வேண்டும் என்றால் நாடகக் கலையின் தேவையை சமூகம் உணர்ந்து அதற்கான ஆதரவை வழங்க வேண்டும்.


குழந்தைகள் நாடக குழுக்களுக்கு ஒத்திகை பார்க்க இடங்களும், குழந்தைகளும் பெற்றோரும் வந்து போகின்ற நாடகபொது வெளியை உருவாக்க வேண்டும். குழந்தைகள் நாடக கலைஞர்களுக்கு அரசு குழந்தைகள் நாடக கலைஞர் விருதை அறிவிக்க வேண்டும்,

குழந்தைகள் நாடகக் கலைஞர்களுக்கு அவரவர் பகுதிகளில் நாடக விழாக்களை

ஒருங்கிணைப்பதற்கான ஆதரவை மாவட்ட நிர்வாகங்கள் வழங்க வேண்டும்! குழந்தைகள் நாடகத்தை உருவாக்குவதற்கான மிகப்பெரிய பட்டய படிப்பையும் பயிற்சி மையத்தையும் உருவாக்க வேண்டும்.


இந்த சமூக ஆதரவு தொடர்ந்து நிகழும் பொழுது குழந்தைகள் நாடகக்கலை வடிவ அடிப்படையிலும், உள்ளடக்க அடிப்படையிலும், மிகப்பெரிய சமூகத் தாக்கத்தை உருவாக்கும் என்பது நம்பிக்கை. நம்பிக்கை தரும் நாளை இருக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை.



சந்திரமோகன்
சந்திரமோகன்

இளங்கலை வணிகவியல் சவேரியார் கல்லூரி பாளையங்கோட்டயில் பயின்றவர்.

தேசிய நாடகப் பள்ளி ,காலச்சுவடு இணைந்து நடத்திய ஒரு மாதகால நடிப்புப் பயிற்சிப் பட்டறையின் மூலம் நவீன நாடக உலகில் 2007 நுழைந்தவர்.


நிகழ் நாடக மையத்தில் முழுநேர நாடகம் ஊழியராக தன் வாழ்க்கையைத் துவங்கி, நிகழ் நாடக மையத்தில் நாடக நிகழ்வுகள், நாடக உருவாக்கம், வடிவமைப்பு மற்றும் கல்வியில் நாடகம் போன்ற நுணுக்கங்களை பல்வேறு அயல்நாட்டு அறிஞர்கள் மூலம் அறிமுகமும் பயிற்சியும் பெற்று நான்காண்டு காலம் பணியாற்றினார்.


திருமிகு. பாலுமகேந்திரா அவர்களின் சினிமா பட்டறையில் நடிப்புத் துறை பேராசிரியராகப் பணியாற்றியவர்.


4 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
துரை. அறிவழகன்
3 days ago
Rated 4 out of 5 stars.

ஏதேனும் ஒரு முன்மாதிரியை உதாரணம் காட்டி எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பயன் கொடுத்து இருக்கும்.

Like
Guest
3 days ago
Replying to

இயலுக்காக நடைபெற்ற இனைய வழி உரையில் பல நாடகங்களை குறிப்பிட்டிருந்தேன், நிறைய நாடகங்கள் பார்க்கத் தொடங்கும் பொழுது முன்மாதிரி நாடகங்களை நீங்கள் கண்டடைவதற்கான பார்வையை முன் வைத்திருக்கிறேன். நீங்கள் பார்க்கின்ற நாடகங்களில் இந்தக் கூறுகள் இருக்குமானால் அந்த நாடகங்களில் பெயர்களையும் அது பேசுகின்ற கதையையும் குறிப்பிடுங்கள் அது இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்கின்ற பொழுது உங்களுக்கு இதோடு பொருந்தி போகின்ற அல்லது பொருந்தாமல் இருக்கின்ற நாடகங்கள் நாடகக் கலைஞர்கள் பெயர்களை குறிப்பிடுவது அவர்களுக்கும் அவர்களின் நாடகத்திற்கும் மிகப்பெரிய அங்கீகாரமாக இருக்கும்.

Edited
Like

Santha Jacob
3 days ago
Rated 5 out of 5 stars.

Lucid , organized hardcore truths told truthfully .

Like
Chandra Mohan
3 days ago
Replying to

Thank you

Like
bottom of page