விடுகதைகள்
- ஞா.கலையரசி
- May 15
- 1 min read

1. வெளியே வெள்ளி, உள்ளே தங்கம் - அது என்ன?
2. சின்னவன் தலைக்குச் சீரான கிரீடம். அது என்ன?
3. கூரை வீட்டைப் பிரித்தால் ஓட்டு வீடு; ஓட்டு வீட்டைப் பிரித்தால் வெள்ளை மாளிகை; உள்ளே குளம். அது என்ன?
4. இத்தனூண்டு சிட்டுக்குருவிக்கு ஏழு முழம் பட்டுப் புடவை. அது என்ன?
5. மூன்று பெண்ணுக்கும் ஒரே முகம்; மூத்த பெண் ஆற்றிலே; நடுப் பெண் காட்டிலே; கடைசிப் பெண் வீட்டிலே. அவர்கள் யார் யார்?
விடைகள்:-
1. முட்டை
2. குண்டூசி
3. தேங்காய்
4. வெங்காயம்
5. முதலை, உடும்பு, பல்லி.
Comments